http://forfood.rezimo.com/?p=432
Ingredients
* சிக்கன் - 200 கிராம்
* மைதா - ஒரு கைப்பிடி
* முட்டை - 2
* ப்ரெட் கிரம்ஸ் - ஒரு கைப்பிடி
* எண்ணெய் - பொரிக்க
* உப்பு - தேவைக்கு ஏற்ப
* மிளகு தூள் - காரத்திற்கு ஏற்ப
* மிளகாய் தூள் - காரத்திற்கு ஏற்ப
* பார்ஸ்லே - ஒரு தேக்கரண்டி (தேவைப்பட்டால்)
* மஞ்சள் தூள் - 2 தேக்கரண்டி
Preparation
1. சிக்கனை நன்கு கழுவி தேவையான அளவில் வெட்டி வைக்கவும். மற்ற தேவையான பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு, மிளகு தூள், பார்ஸ்லே சேர்த்து கலக்கவும். பின்பு முட்டையை அதனுடன் அடித்து வைக்கவும்
3. ப்ரெட் கிரம்ஸில் மிளகு, உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். பின்பு ஒரு தட்டில் மைதா, அதன் பின் முட்டை கலவை, ப்ரெட் கிரம்ஸ் என்று வரிசையாக வைக்கவும்
4. முதலில் சிக்கனை மைதாவில் பிரட்டி வைக்கவும்
5. அடுத்து அந்த சிக்கன் துண்டை முட்டை கலவையில் போட்டு எடுக்கவும்.
6. அதன் பின்னர் ப்ரெட் கிரம்ஸில் போட்டு பிரட்டி எடுக்கவும்.
7. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ப்ரெட் க்ரம்ஸில் பிரட்டி எடுத்த சிக்கனை போடவும்.
8. நன்கு பொரிய விட்டு இரு புறமும் சிக்கன் நன்கு வெந்ததும் எடுக்கவும்.
9. சுவையான சிக்கன் நக்கெட்ஸ் தயார்.
No comments:
Post a Comment